கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி தலைவலி, இடுப்பு வலி போன்றவை வருவது சாதாரணம் தான். கர்ப்பம் தரித்த 5வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம். வெகு சிலருக்கு கர்ப்பமான 8வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்ன? கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். எதற்கு தீர்வு என்ன? 1.உடற்பயிற்சி மருத்துவ அறிவுரைப்படி, நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை செய்வதால் முதுகு, வயிறு தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும். இதனால் வலியை குறைக்கலாம். 2.ஒத்தடம் பனிக்கட்டியால் முதுகுப்பகுதியில் தினமும் 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்கலாம். இரண்டு அல்லது மூன்று நாள் பனிக்கட்டி சிகிச்சைக்கு பின்பு மீதமான சுடுநீரினால் முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். 3.தூங்கும்...