முட்டைக்கோஸின் பயன்கள்
இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வந்தால் நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முட்டைக்கோஸின் பயன்கள் : இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸ் உதவுகிறது. முட்டைக்கோஸின் சாறு உடல் பருமனைக் குறைக்கும். முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் உடலும், முகமும் இளமை தோற்றத்துடன் இருக்கும். சொறி, சிரங்கு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். முட்டைக்கோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் ’பிரீ-ரேடிக்களை’ சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள், உடம்பின் உணர்வுகளுக்கும் இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது. பொட்டாசியம், மக்னீசியம்...