குழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும்?
இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. பெரும்பாலான தம்பதிகள் தனிக்குடித்தனம் தான் இருக்கிறார்கள். இதனால் முதல் முறையாக தாயாகி இருக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து, 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க யாருக்கும் இல்லாமல் தவிக்கிறார்கள். அப்படி தனியாக இருக்கும் தம்பதிகளுக்கு, இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது தான். ஆனால் குழந்தைகள் வளர வளர அந்த தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. எனவே எப்போது திட உணவுகளைக் கொடுக்க வேண்டும், எப்போது ஜூஸ் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைக்கு எந்த ஒரு உணவைக் கொடுப்பதற்கு முன்னும், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை இல்லாமல் எதுவும் கொடுக்கக்கூடாது. மாதம் 1 முதல் மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொட...