துளசியின் மருத்துவ குணங்கள்!!!

துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல, சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தான் என்று உங்களுக்கு தெரியுமா? ஏதோ சில காரணங்களால் துளசி மாடமும் துளசி தீர்த்தமும் இந்து மதத்தை சார்ந்தது போல அனுமானம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இது மதத்தை தாண்டிய மாபெரும் மருத்துவம். துளசி மடத்தை தினமும் சுற்றி வருதல், தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம். ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும். இதனால் தான் துளசி மாடம் , துளசி நீர் புனிதமாக கருதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் உரைத்த அனைத்திற்கும் பின்னணியில் மருத்துவம் இருக்க தான் செய்கிறது… துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன்,...