துளசியின் மருத்துவ குணங்கள்!!!

துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல, சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தான் என்று உங்களுக்கு தெரியுமா?

ஏதோ சில காரணங்களால் துளசி மாடமும் துளசி தீர்த்தமும் இந்து மதத்தை சார்ந்தது போல அனுமானம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இது மதத்தை தாண்டிய மாபெரும் மருத்துவம். துளசி மடத்தை தினமும் சுற்றி வருதல், தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.

ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும். இதனால் தான் துளசி மாடம் , துளசி நீர் புனிதமாக கருதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் உரைத்த அனைத்திற்கும் பின்னணியில் மருத்துவம் இருக்க தான் செய்கிறது…

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

வேறு பெயர்கள்:

துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

இனங்கள்:

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

வளரும் தன்மை

வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிகிரி.

பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

மருத்துவ பயன்கள்

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.
தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும்.உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.

காய்ச்சல்

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.

தொண்டைப்புண்

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண்  குணமாகும்.

தலை வலி

உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

கண் பிரச்சனைகள்

கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.

வாய் பிரச்சனைகள்

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.

இதய நோய்

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சளி, இருமல்

இருமல் கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

சிறுநீரக கற்கள்

துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைக்கும்....

நுரையீரல் தொற்று

அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...