முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்
முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முள்ளங்கி பல நோய்களை கட்டுப்படுத்துகிறது.உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் காய் வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல் முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. முள்ளங்கியின் மருத்துவ பயன்களை விவரிப்பதே இந்த பதிவு.
சிறு நீரக கோளாறு நீங்க:
சிறு நீரக கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து தினமும் ஒரு கப் முள்ளங்கி சாறு அருந்தி வந்தால் எரிச்சல் மற்றும் சிறு நீரக வியாதிகள் நீங்கும்.
நுரையீரல் தொற்றுக்கு:
இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள் (இதயவலி) வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கிக் கிழங்குச் சாறுடன் அதே அளவு தேனையும் கலந்து சாப்பிட வேண்டும்.
சிறிது உப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். தினசரி மூன்று வேளை இது போல் சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும். இது மிக உயர்தரமான நன்மையைத் தரும் மருத்துவ முறையாகும்.
சரும வியாதிகளுக்கு:
சரும வியாதிகளுக்கு மகத்துமான நன்மைகளை தருகிறது சரும வியாதிகள். படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தேமல், மங்கு, எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும்.
முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.
குழந்தைகளுக்கு அறிவாற்றல் பெருக:
குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
மஞ்சள் முள்ளங்கி
மஞ்சள் முள்ளங்கியை காரட் என்ற பெயரில் புகழ் அடைந்துள்ள ஒரு கிழங்கு வகை காய். இதை கழுவி சமைக்காமலேயே சாப்பிடலாம். தினம் ஒரு காரட் சாப்பிட்டால் கண் மருத்துவரிடம் செல்லும் நிலை ஏற்படாது. இது மூளைக்கு நல்லது , தலை சுற்றல், மயக்கம் முதலியவற்றைத் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. சித்த பிரம்மையை போக்கும் வல்லமையுடையது. மூட்டு வலியை போக்கும், வாயுத்தொல்லை மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க கூடியது.
சிவப்பு முள்ளங்கி
சிவப்பு முள்ளங்கிசிறு நீர்ப்பையைச் சுத்தமாக்கி சிறுநீரை முறைப் படுத்தும் நீர்க்குத்தலைப் போக்கும். வயிற்று பூச்சிகளை அழிக்கும் , சீரணத்தை எளிதாக்கும், மூலநோய்,வெள்ளை நோய் , பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். கண்ணெரிச்சலை நீக்கும் குணம் உடையது. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும். வயிற்று புண்களை குணப்படுத்தக் கூடியது. உடல் சோர்வு, உடல் சூடு மற்றும் தோல்வறட்சி முதலியவற்றை போக்க கூடியது. தோலை வழவழப்பாக்கும் தன்மையுடையது. சிறுகுழைந்தைகளுக்கும், மழை காலங்களில் பெரியவர்களுக்கும் ஆகாது.
வெள்ளை முள்ளங்கி
வெள்ளை முள்ளங்கிசி றுநீரை ஒழுங்குப்படுத்தும், மூலநோய், தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர்சுருக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும், சீதபேதியை கட்டுப்படுத்தும். எலும்புக்கு பலம் சேர்க்கும். மஞ்சள்காமாலைக்கு மிகவும் நல்லது. வாத நோய்க்காரர்கள் குறைவாக உண்ணலாம், மழைக்காலங்களில் வயதானவர்களுக்கும்,சிறு குழந்தைகளுக்கு ஆகாது. மாதவிடாய் காலங்களில் உண்டால் மாதவிலக்கு அதிகமாகும் இக்காலங்களில் தவிர்ப்பது நல்லது.
Comments
Post a Comment