சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...
இப்பொழுது எங்குப் பார்த்தாலும் மழை நீர் தேங்கி பல தொற்று நோய்களையும், காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்படுத்தி வருகிறது. நம்முடைய முன்னோர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து நோய்களை விரட்டினர். அவை நல்ல பலனை அளித்து வந்துள்ளது.ஆனால் நம் கடையில் உள்ள கண்ட மாத்திரை பயன்படுத்தி பக்கவிளைவுகளால் பாதிப்பு அடைகிறோம்...
சளி பிடித்தால் மூக்கை வேகமாகச் சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் மூக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச்செவிக் குழாய்க்குள் புகுந்து காதைச் செவிடாக்கி விடக்கூடும்.
சளி தொல்லையில் இருந்து நீங்க சிறந்த நிவாரணம் அடைய 20 வகையான எளிய குறிப்புகள்...
1. சளி மற்றும் தலைபாரம் குறைய , கிராம்பைத் தண்ணீர் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் பலன் கிடைக்கும்.
2. சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.
3. கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும்.
4. மூக்கில் சளி ஒழுகாமல் இருக்க: மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட சளி ஒழுகுதல் நிற்கும்.
5. குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
6. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க, ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும்.
7. குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
8. சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைக்கலாம். மூக்கடைப்பு நீங்கும்.
9. அன்றாடம் இந்த துளசி இலையை மென்று அதன் சாரை விழுங்கினாலே சளி நம்மை விட்டு வெகு தூரம் சென்று விடும்.
10. சுக்கு தேநீர்,கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகவும்.
11. எலுமிச்சை மற்றும் தேன்..1 மேசை கரண்டி தேன் மற்றும் 2 மேசை கரண்டி எலுமிச்சை சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் 3 வேளை குடிக்க சளித்தொல்லை நீங்கும்.
12. இஞ்சி சாறு மற்றும் தேன்...2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 மேசை கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை உண்ண வேண்டும். உங்கள் நெஞ்சு சளியை உடனே தீர்க்கும்.
13. சீரகத்தை நன்கு பொடி செய்து பனங்கற்கண்டுடன் தினமும் 2 வேளை சாப்பிட்ட வேண்டும். இது சளி இருமலை போக்கும்.
14. ஏலக்காய் பொடி....1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும்
15. கருந்துளசி இலைகளை 1 லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகுவது மட்டுமில்லாமல், அந்த துளசி இலைகளை மென்று முழுங்க வேண்டும்.
16. தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி நெஞ்சில் தட வேண்டும். இது நெஞ்சு சளியைப் போக்கும்.
17. கற்பூரவல்லி இலை சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க சளி நீங்கும்..
18. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
19. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
20.ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்..
Comments
Post a Comment