எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது. ஒரு காலத்தில் வழுக்கை பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் வழுக்கை விழுதல் என்பது ஒரு ...கேலிக்குரியதாக மாறிவிட்டது. ஆண்களின் புறத்தோற்றத்தை கெடுப்பதில், வழுக்கை முக்கிய கெடுபங்கை வகிக்கிறது. எத்தனையோ நல்ல விசயங்கள் நிறைந்த மனிதராக இருந்தாலும், அவர்களின் வழுக்கை அவர்களை நட்பு வட்டம், மற்றும் அலுவலக வட்டத்திலிருந்து, விலக்கி வைக்கிறது, அவர்களும் நாளடைவில் தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையுடன் தனிமைப்பட்டுபோய், மன இறுக்கத்தினால், தளர்வடைந்து விடுகிறார்கள், இதனால் சில ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது கூட கடினமான விஷயமாகிவிடுகிறது. மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். முடி இருந்தால் அழகு, வழுக்கை விழுந்தால் அழகற்றது என்பதற்கு சாராம்சமான பின்னணி ஏதுமில்லை. இது பார்ப்பவர்களின் மனத்தளவில் ஏற்படும் ஒரு தேவையற்ற உணர்வே.
1. சின்ன வெங்காயத்தை அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வர முடி வளர்வதை காணலாம். வெங்காயம் சாறு முடி இழப்பு, மற்றும் புதிய முடி வளர நல்லது.
2. வழுக்கை தலையில் முடிவளர சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
3. முட்டை மாஸ்க் உலகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கலாச்சாரங்களால், சிறிய மாற்றங்களுடன், பின்பற்றப்படும் வீட்டு சிகிச்சை இது. இதில் அதிக அளவிலான புரதங்கள் உள்ளதால் புதிய முடி உருவாவதற்கு உதவிடும். மேலும் சல்ஃபர், ஜிங்க், இரும்பு, செலீனியம், பொட்டாசியம் மற்றும் ஐயோடின் ஆகியவைகளும் இதில் வளமையாக உள்ளது. பயன்படுத்தும் முறை: ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலந்திடவும். வழுவழுப்பான பேஸ்ட் உருவாகும் வகையில் அதனை நன்றாக கலந்திடவும். இதனை தலை முடி முழுவதும் கவனமாக தடவுங்கள். பின் அதை அப்படியே ஒரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலை முடியை அலசிய பின்பு ஷாம்பு போட்டு குளித்திடுங்கள்
4. நெல்லிக்காய் நெல்லிக்காயில் உள்ள பல்வேறு அதிசய குணங்களைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் வளமையாக உள்ள கிடைங்கு என்றால் அது மிகையாகாது. ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்தும் நெல்லிக்காய், தலை முடியின் நிறமியையும் மேம்படுத்தும். பயன்படுத்தும் முறை: 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸை 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் உடன் கலந்திடுங்கள். இதனை தலைச்சருமத்தில் தடவுங்கள். பின் காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இப்போது வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள்.
5.அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்
முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
1. வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2. வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
3. சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
4. சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5. கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
என்ன செலவானாலும் வழுக்கை தற்போது ஒரு மிகப் பெரிய பிரச்சனையல்ல, எனினும் உணவு முறை, கவலைப்படாமல் இருத்தல், நல்ல தூக்கம் இதோடு உங்கள் முடி ஆரோக்யத்தை அவ்வவ்போது பரிசோதனை செய்ய சரும நோய் நிபுணரை அணுகுதல் போன்றவற்றால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...