குழந்தைகளுக்கு மற்றும் பெரியவருக்கு சளியினால் ஏற்படும் தொந்தரவு தீர பயனுள்ள விட்டு மருத்துவ குறிப்புகள்!!!!!!

1) குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலையை 5 அல்லது 6 என்ற அளவில் எடுத்து கழுவி ஒரு தவாவில் வைத்து வதக்கி பிறகு சாறு பிழிந்து கொடுத்து வந்தால் சளித்தொல்லை தீரும்.
2) குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலில் தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொடுத்து வர சளி குறையும்.
3) மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகப்படியான சளியினால் மூச்சு விட கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு குப்பைமேனி இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் உப்பு அரை தேக்கரண்டி அளவு வைத்து நன்கு கசக்கி சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற்றாமல் பால் அல்லது ஏதாவது சாப்பிட கொடுத்து விட்டு பிறகு கொடுக்கவேண்டும். சிறிது நேரத்தில் வாந்தி வரும், இதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும். இதனால் சளி குறைவதோடு மூச்சு விட சுலபமாக இருக்கும்.
4) பெரியவர்களுக்கு தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும்.
5) சளியினால் ஏற்படும் இருமலை போக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும், அரை டம்ளர் ஆனவுடன் இறக்கி வடிகட்டி சூடாக பருகவும். இவ்வாறு குடிப்பதால் இருமல் நிற்பதோடு சளி தொல்லையும் தீரும்.
6) வறட்டு இருமல்...
வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும்.இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...