குடல் புற்று நோயை அழிக்கும் அற்புத பழத் தோல் எது தெரியுமா? ஆச்சரியமூட்டும் தகவல்!!
பெருங்குடல் புற்று நோயை பற்றி இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் திராட்சையின் தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் திராட்சை விதைகளின் சாறு இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்த கலவை பெருங்குடல் புற்று நோய் செல்களை கொல்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து சிகிச்சை மேற்கொண்டால் குடல் புற்று நோய் வருவதும் தடுக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள பெனிஸ்சுலவேனியா உணவறிவியல் பல்கலைக்கழக பேராசிரியரான ஜெய்ராம் k. P வனமாலா அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.
மேலும் இந்த திராட்சையில் பொருட்கள் ஆரோக்கியமான செல்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவது இல்லை என்று ஆராய்ச்சியின் முடிவு கூறுகிறது என்று பென் ஸ்டேட் கேன்சர் இன்ஸ்டிட்யூட் வனமாலா சொல்லுகிறார்.
இந்த ஆராய்ச்சியை பற்றிய செய்திகள் காம்ளிமன்ட்ரி அல்டர்நேட்டிவ் மெடிசன் (complementary and alternative medicine) என்ற தலைப்பில் பிஎம்சி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பெருங்குடல் புற்று நோய் தான் பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது புற்று நோய் என்றும் மூன்றாவதாக ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் வெற்றியாக திராட்சையின் கூட்டு பொருட்கள் மூலம் மாத்திரைகள் தயாரித்து அதன் மூலம் குடல் கேன்சரிலிருந்து தப்பித்த உயிர் பிழைத்தவர்களின் ரிப்போர்ட் கூறுகிறது.
முதலில் இந்த பொருட்களை கொண்டு செல் கல்ச்சர் மற்றும் எலியில் தான் ஆராய்ச்சி செய்தார்கள்.அப்போது கேன்சர் ஸ்டெம் செல்லை அது எளிதாக அழித்து விட்டது. எங்களின் ஒரே ஒரு இலக்கு கேன்சர் ஸ்டெம் செல்லை அழிப்பதே ஆகும். ஏனெனில் கேன்சர் கட்டிகள் வளர்வது இந்த ஸ்டெம் வழியாகத் தான் என்று வனமாலா கூறுகிறார்.
இதை விலங்குகளுக்கு பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் 52 குடல் கேன்சர் உள்ள எலிகளை 3 குரூப்புகளாக பிரித்தோம். இதில் ஒரு குரூப்புக்கு திராட்சையின் கூட்டுப் பொருள் அல்லது சுலின்டேக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின் முடிவில் சுலின்டேக் பயன்படுத்திய எலிகளில் 50% கேன்சர் கட்டிகள் குறைந்துள்ளது. இது எடுத்துக் கொண்ட சுலின்டேக் அளவுக்கு சமமானதாகும்.
மேலும் திராட்சையின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் திராட்சை விதை சாறு இவற்றை தனித் தனியாக பயன்படுத்தினால் அவைகள் கேன்சர் செல்களுக்கு எதிராக செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது. எனவே இவற்றின் கூட்டுப் பொருட்கள் தான் கேன்சர் செல்லை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
இந்த திராட்சை கூட்டுப் பொருட்களால் ஆன குறைந்த அளவு மாத்திரைகளை மனிதருக்கு பயன்படுத்தி குடல் கேன்சர் தடுப்பதில் வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த கூட்டுப் பொருட்கள் நாம் பயன்படுத்தும் ஒயினில் உள்ளன என்று ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.

Comments
Post a Comment