பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்...

இது மிகக்குறைவான கலோரி கொண்ட காய்.இதில்100 கிராம் காய் 26 கலோரிகள் உள்ளவை. இதிலில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் A,C மற்றும் e ஆகியவை அதிகம்.
• வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சருமம் ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.
• இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது.
• Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது.
• பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவுகிறது.
• ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம்.
• தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.
• பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை – நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.
• பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் இருக்கிறது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது.
• பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.
• பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...