பட்டாணி பல ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு உணவு.
பட்டாணி பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் இது நன்மைகள் ஏராளம்.பட்டாணியை அறுவடைசெய்த பிறகு அந்த செடிகள் தாமாக கீழே விழுந்து மண்ணுக்கு உரமாக செயல்படுகிறது. பட்டாணி வளர்ச்சிக்கு தண்ணீரின் தேவை மிகவும் குறைவு. ஆகையால் நீர் பாசனம் குறைவாக இருக்கும் இடங்களிலும் இதனை பயிரிடலாம். நீரின் உபயோகத்திற்காக அதிக பணம் செலவழிக்க தேவை இல்லை.
பட்டாணியில் கொட்டைகள் இருப்பதாலும், அவை பூக்களில் இருந்து வளர்வதாலும், இது காய்கறி வகையாக கருத பட்டாலும் நிஜத்தில் பழ வகையை சேர்ந்ததாகும். உலர் பட்டாணியின் முந்தைய பருவமே இந்த பச்சை பட்டாணியாகும். இந்த உலர் பட்டாணி , 5000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்த ஒரு உணவு பண்டமாகும். இதனை பயிர் செய்வதும் மிக சுலபம். 16ம் நூற்றாண்டு வரை இந்த பச்சைபட்டாணியை மக்கள் அதிகம் உபயோகித்ததில்லை. பச்சை பட்டாணியை அதன் அதிக அளவு புரத ஆற்றலால்பல வணிக புரத பொடிகளில் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.கனடா உலகின் மிகப்பெரிய பட்டாணி உற்பத்தியாளராக உள்ளது!
எடை மேலாண்மை :
பச்சைபட்டாணியில் கொழுப்பு சத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. 1 கப் பட்டாணியில் 100 ஐ விட குறைந்த கலோரிகளே உள்ளன. ஆனால் புரத சத்து , நார் சத்து மற்றும் நுண்ணிய ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன.
வயிற்று புற்றுநோயை தடுக்கிறது:
பச்சை பட்டாணியில் கம்மெஸ்ட்ரோல் என்றழைக்கப்படும் சுகாதார பாதுகாப்பு பாலிபினால் அதிக அளவு உள்ளது. மெக்ஸிகோ நகரில் ஒரு ஆய்வில், வயிற்றுப் புற்றுநோயை தடுக்க இந்த பைட்டோனுயூட்ரியின் ஒரு நாளைக்கு 2 மில்லிகிராம்கள் தேவைப்படுமென உறுதிப்படுத்தின. ஒரு கப் பட்டாணியில் குறைந்தது 10மி கி அளவு உள்ளது .
சிறந்த ஆக்ஸிஜனேற்றி :
பச்சை பட்டாணியில் பிளேவனாய்டு , கார்டீனோய்ட், பீனோலிக் அமிலம் மற்றும் பாலிபீனால் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. ஆகவே இது வயது முதிர்வை தடுக்கிறது. அதிக ஆற்றலை தருகிறது. சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
சுருக்கங்கள் மற்றும் வீக்கங்களை குறைகிறது:
பச்சை பட்டாணி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. அதிகப்படியான வீக்கம் இதய நோய், புற்று நோய் மற்றும் வயது முதிர்வுக்கு வழி வகுக்கும். பச்சை பட்டாணியில் உள்ள Pisumsaponins I மற்றும் II & pisomosides A மற்றும் B ஆகிய பல்லூட்டச்சத்துகள் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. இவைகள் பச்சை பட்டாணியில் அதிகம் உள்ளன. ஆல்பா லினளாய்க் அமிலம் என்ற வடிவத்தில் ஒமேகா 3 கொழுப்பு சத்து இவற்றில் காணப்படுகின்றன. துத்தநாகம் , மற்றும் வைட்டமின் சி மற்றும் ஈ பச்சை பட்டாணியில் அதிகம் காண படுகிறது. ஆகையால் வீக்கத்தால் உருவாகக்கூடிய நோய்கள் ஆகிய அல்சைமர், கீல்வாதம், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தடுக்கப்படுகிறது
இரத்த சர்க்கரை மற்றும் இதய நோய் :
சர்க்கரையின் செரிமான நேரத்தை அதிகரிக்க அதிக நார் சத்தும் புரத சத்தும் உதவுகின்றன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது. பல ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் ஆரோக்கியமான இரத்த நாளங்களை ஆதரிக்கின்றன. நமது இரத்தக் குழாயின் சுவர்களில் உள்ள பிளேக் உருவாக்கம் நீண்டகாலமாக, அதிகப்படியான விஷத்தன்மை கொண்ட அழுத்தம் மற்றும் வீக்கம் ஆகியவற்றுடன் ஹான் ஆரம்பமாகிறது. வைட்டமின் B1 மற்றும் ஃபோலேட், B2, B3 மற்றும் B6 ஆகியவை அதிக அளவில் இருப்பதால் , ஹோமோசிஸ்டீன் அளவைக் குறைக்கிறது, இந்த ஹோமோசிஸ்டீன் என்பது இதய நோய்க்கான ஆபத்து காரணி ஆகும்.
சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது:
பட்டாணி மண்ணில் இருக்கும் பாக்டீரியாவுடன் செயல்பட்டு காற்றிலிருக்கும் நைட்ரஜனை மண்ணில் படிய வைக்கிறது. நைட்ரஜன் மண்ணுக்கு ஒரு சிறந்த இயற்கை உரம். ஆகையால் செயற்கை உரங்களின் தேவை குறைகிறது. சுற்று சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
வலுவான எலும்புகளை உருவாக்குகிறது :
1 கப் பட்டாணியில் 44% வைட்டமின் கே உள்ளது. இது எலும்புகள் உள்ளே கால்சியம் ஊடுருவ உதவுகிறது. இதன் பி வைட்டமின்கள் கூட ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களை தடுக்க உதவும்.
கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மலச்சிக்கல் :
நியாசின் என்னும் ஊட்டச்சத்து பாட்டனியில் அதிகம் இருப்பதால் , ட்ரிகிளிசெரைடுகள் உற்பத்தியை குறைத்து கெட்ட கொலெஸ்ட்ரோல் அளவை குறைகிறது . பட்டாணியில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை அதிகரித்து மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
Comments
Post a Comment