புளிச்சகீரை மருத்துவ பயன்கள்..
பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் #குழந்தைகளுக்கு_அடிக்கடி_இந்த_கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.
இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "#கோங்குத்ரா_சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கல்ந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள். சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள்.
காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.
பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகபடுத்தும் குணமுடையது.
#இதில்_உள்ள_சத்துக்கள்:
இரும்பு சத்து - 2.28 மில்லி கிராம்
வைட்டமின் ஏ - 2898 மைக்ரோ கிராம்
மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகியவை உள்ளன..
#புளிச்ச_கீரை...மருத்துவ குணநலன்களும்!!! பயன்படுத்தும் முறைகளும்!!!
கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியதுமான புளிச்ச கீரையை பற்றி பார்ப்போம். புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது.
Comments
Post a Comment