வெறும் வயிற்றில் முட்டைக்கோஸை ஜூஸ் செய்துக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

முட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால், அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் நம் உடல் உறிஞ்சிக் கொள்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸை ஜூஸ் செய்துக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் இருக்கிறது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது குடலில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை அழித்து, குடல்புண் வராமல் தடுக்கிறது. இந்த முட்டைக்கோஸ் ஜூஸில் இருக்கும் சத்துக்கள் சுவாசப் பாதையில் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
மேலும் முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம் இருப்பதால், இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. முட்டைக்கோஸில் சல்ஃபோரபேன் உள்ளது. எனவே இதனை ஜூஸ் செய்து குடித்தால், நம் உடம்பில் ஏற்படும் புற்றுநோய்களின் தாக்கம் வராமல் தடுக்கிறது.
முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால், நமது உடம்பில் ஏற்படும் ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த முட்டைக்கோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நம் உடம்பில் அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, மேலும் அல்சர் பிரச்சனைகளை விரைவில் குணமாக்குகிறது.
உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்.இதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடம்பில் உள்ள கல்லீரலை சுத்தம் செய்து, கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. முட்டைக்கோஸ் ஜூஸில் குளுக்கோஸினோலேட்டுகள் என்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலைத் தொற்றும் நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க்கிறது.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...