ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சில பழ வகைகளை பற்றி இங்கு காண்போம்.


1. நீர்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். முகப்பரு பிரச்சினையில் இருந்தும் சருமத்திற்கு பாதுகாப்பும் தரும்.

2. பப்பாளி பழத்தை சாப்பிட்டு வருவதும், ஆரோக்கிய சருமத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

3. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சருமத்திற்கும் ஏற்றது. இதனை பழமாகவோ, ஜூசாகவோ பருகி வரலாம்.

4. வாழைப்பழம், சருமத்தில் ஈரப் பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது. உலர்ந்த சருமத்தை புதுப்பித்து, நீர்ச்சத்தை பராமரிக்கவும் செய்கிறது. குளிர்காலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் சருமத்தில் நெகிழ்வு தன்மையை தக்கவைக்க முடியும்.

5. இளமை தோற்றத்தை தக்க வைக்கும் மாதுளை குளிர்காலத்தில் சரும ஜொலிப்புக்கும் துணை புரிகிறது. தோல் சுருக்கங்களை போக்கவும், வயதான தோற்றத்தை தவிர்க்கவும் குளிர்காலத்தில் தவறாமல் மாதுளை சாப்பிட வேண்டும்.

6. குளிர்காலத்தில் சருமத்தின் தோழனாக திராட்சை விளங்குகிறது. இதுவும் தோல் சுருக்கங்கள், வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது. புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

7. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் ஆப்பிளின் பங்களிப்பு மகத்தானது. சருமம் உலர்ந்து போவதை தடுத்து பளபளப்பை தக்க வைப்பதற்கும் ஆப்பிள் சாப்பிட்டு வர வேண்டும்.

8. ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் வைட்டமின் சி நிரம்பப்பெற்றவை. அவை சருமத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையை நீக்க உதவும்.

9. திராட்சையில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். அதில் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் சருமத்திற்கு நலம்பயக்கும்.

10. கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ, சி, லிகோபீன், கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இதுவும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்துகிறது. இதிலிருக்கும் வைட்டமின் கே, முகப்பரு, சரும எரிச்சல், சருமத்தில் ஏற்படும் சிவப்புத்திட்டு போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
வைட்டமின்கள்-ஏ நிறைந்த பப்பாளிப் பழத்தின் தோலைச்சீவி, அதை நன்கு கூழ் போல ஆக்கி, முகத்தில் 'பற்று" போலப் போட்டால் சருமத்தின் நிறம் கூடும். சருமம் பட்டுப்போல மென்மையாகும்.

Comments

Popular posts from this blog

வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

முருங்கையின் மருத்துவ பயன்கள்!!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தலைமுடியை அதிகமாக வளர செய்ய வேண்டுமா? இதோ சில குறிப்புகள்...

காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே கிடைக்கும் நன்மைகள்.....

ஊளை சதையை குறைக்க ஒரு அருமையான இயற்கை வைத்தியம்....

நெல்லிக்காய் ஜூஸ் அருந்திவந்தால் கிடைக்கும் நன்மைகள்...