வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது. ஒரு காலத்தில் வழுக்கை பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் வழுக்கை விழுதல் என்பது ஒரு ...கேலிக்குரியதாக மாறிவிட்டது. ஆண்களின் புறத்தோற்றத்தை கெடுப்பதில், வழுக்கை முக்கிய கெடுபங்கை வகிக்கிறது. எத்தனையோ நல்ல விசயங்கள் நிறைந்த மனிதராக இருந்தாலும், அவர்களின் வழுக்கை அவர்களை நட்பு வட்டம், மற்றும் அலுவலக வட்டத்திலிருந்து, விலக்கி வைக்கிறது, அவர்களும் நாளடைவில் தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையுடன் தனிமைப்பட்டுபோய், மன இறுக்கத்தினால், தளர்வடைந்து விடுகிறார்கள், இதனால் சில ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது கூட கடினமான விஷயமாகிவிடுகிறது. மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். முடி இருந்தால் அழகு, வழுக்கை விழுந்தால் அழகற்றது என்பதற்கு சாராம்சமான பின்னணி ஏதுமில்லை. இது...
Comments
Post a Comment