வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம்
வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும் காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன. பரம்பரையாக இது ஏற்படுவதுண்டு. அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும். மற்ற காரணங்கள் :- வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும். வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி? மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத...
Comments
Post a Comment