சளி,இருமல்,தலைபாரம் போன்ற தொல்லையில் இருந்து நிவாரணம் அடைய 20 வகையான எளிய மருத்துவ குறிப்புகள்...

இப்பொழுது எங்குப் பார்த்தாலும் மழை நீர் தேங்கி பல தொற்று நோய்களையும், காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்படுத்தி வருகிறது. நம்முடைய முன்னோர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து நோய்களை விரட்டினர். அவை நல்ல பலனை அளித்து வந்துள்ளது.ஆனால் நம் கடையில் உள்ள கண்ட மாத்திரை பயன்படுத்தி பக்கவிளைவுகளால் பாதிப்பு அடைகிறோம்... சளி பிடித்தால் மூக்கை வேகமாகச் சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் மூக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச்செவிக் குழாய்க்குள் புகுந்து காதைச் செவிடாக்கி விடக்கூடும். சளி தொல்லையில் இருந்து நீங்க சிறந்த நிவாரணம் அடைய 20 வகையான எளிய குறிப்புகள்... 1. சளி மற்றும் தலைபாரம் குறைய , கிராம்பைத் தண்ணீர் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் பலன் கிடைக்கும். 2. சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும். 3. கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும். 4. மூக்கில் சளி ஒழுகாமல் இருக்க: மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட சளி ஒழுகுதல் நிற்கும்...